வாரம் ஒரு நாள் சாப்பிட்டா போதும்… மொத்த உடம்பும் சுத்தமாகிடும்!!!

Author: Hemalatha Ramkumar
20 June 2023, 10:52 am

கொடியில் காய்க்க கூடிய காய்கறி வகைகளில் பீர்க்கங்காயும் ஒன்றாகும் பீர்க்கங்காயில் அதிகப்படியான நீர் சத்து, இரும்புசத்து, ரிபோஃப்ளோவின், வைட்டமின் சி, துத்தநாகம், மெக்னீசியம், தயாமின், பீட்டா கரோட்டின் மற்றும் நார் சத்துக்கள் உள்ளிட்ட சத்துகள் அடங்கி உள்ளன.

பீர்க்கங்காய் உண்ணுவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
பீர்க்கங்காயில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் நார் சத்துக்கள் நாம் உண்ணும் உணவை எளிதில் செரிமானம் அடைய செய்கின்றன. எனவே பீர்க்கங்காய் சாப்பிடுவதால் மூலநோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகள் எளிதில் தீர்க்கப்படுகின்றது.

பீர்க்கங்காயில் உள்ள அதிக நீர்ச்சத்து நம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைக்கிறது. மேலும் இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது.
இவற்றில் உள்ள பெப்டைட் மற்றும் ஆல்கலாயிடுகள் நம் உடலில் இன்சுலின் சுரப்பதை ஊக்குவிக்கிறது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவதால் அவர்களின் உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பீர்க்கங்காயில் உள்ள பீட்டாகரோட்டின் நம்முடைய கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது மற்றும் கண் எரிச்சல் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கிறது.
நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிப்பதில் பீர்க்கங்காய் அதிக பங்கு வைக்கிறது.

பீர்க்கங்காய் அதிகளவு உண்பதால் நம்முடன் இரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகள் வெளியேற்றப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.
கல்லீரலில் உள்ள நச்சுக்கழிவுகள் மற்றும் நோய் தொற்றுகளை அகற்றி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

அதிகப்படியான மது அருந்துவதால் பாதிக்கப்பட்டுள்ள கல்லீரலை குணப்படுத்துகிறது.
அதிகப்படியான பித்தம் காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை நோய்க்கு இதன் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
நோய் தொற்றுக் கிருமிகள் தாக்காமல் நமது உடலை பாதுகாத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
பீர்க்கங்காய் அதிகமாக உண்பதால் இவற்றில் உள்ள நீர்ச்சத்து காரணமாக சரும வறட்சி முற்றிலும் போக்கப்படுகிறது. சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • age gap between priyanka deshpande and her husband vj vasi இவ்வளவு வயசு வித்தியாசமா? விஜய் டிவி பிரியங்காவின் இரண்டாவது கணவர் இப்படிபட்டவரா?