ரூ.3 ஆயிரம் மின் கட்டணத்திற்கு ரூ.17 ஆயிரம் அபராதமா..? கேள்வி கேட்டால் மிரட்டுறாங்க ; கதறும் மூதாட்டி…!!!

Author: Babu Lakshmanan
20 June 2023, 2:13 pm

ரூ.3 ஆயிரம் மின்கட்டணத்திற்கு ரூ.17 ஆயிரம் அபராதம் விதித்ததை கேட்ட மூதாட்டியை அதிகாரிகள் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – அண்ணா நகரைச் சேர்ந்த ரமணி என்பவர் வீட்டிற்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாத பயன்பாட்டு அடிப்படையில் ரூ.3,380 மின்கட்டணமாக விதிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக மின்சார வாரியம் கொடுத்த காலக்கெடுவுக்குள் மின்கட்டணத்தை ரமணியால் செலுத்த முடியவில்லை.

மின்கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்கவில்லை. இதையடுத்து, மே, ஜுன் மாதங்களில் பயன்பாட்டின் அடிப்படையில் ரமணிக்கு ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் 4 ஆயிரத்து 750 ரூபாய் வந்துள்ளது.

இதையடுத்து, மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகம் சென்றபோது, 17 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்தார்.

3 ஆயிரத்து 380 ரூபாய் மின் கட்டணத்திற்கு, 17 ஆயிரம் ரூபாய் அபராதமா என மின்வாரிய அலுவலகத்தில் வயதான பெண்மணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இது தொடர்பாக கேள்வி கேட்டால், போலீஸில் பிடித்து கொடுத்து விடுவோம் என மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க தெரிவிக்கிறார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?