நடிகர் விஜய் தலைமையில் திருச்சியில் மாநாடு? பிறந்தநாளன்று புதிய திட்டம்? வெளியான தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 2:31 pm

தளபதி விஜய்யின் 49வது பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி நாளை மறுநாள் லியோ படத்தின் முதல் சிங்கிளான “நா ரெடி” பாடல் வெளியாகிறது. தளபதி ரசிகர்கள் பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில், நடிகர் விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதி, நலத்திட்ட உதவிகள் வழங்குவதோடு, அத்துடன் ஒரு பெரிய மாநாட்டினை நடத்திடவும் திட்டமிட்டிருப்பதாக விஜய் ரசிகர்கள் ஒரு தகவலை அண்மையில் பரப்பினர்.

ஆம்…. திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் ஒரு வைரல் போஸ்டரை ஒன்றை ஒட்டியிருந்தனர். அதில், ‘திருச்சி என்றாலே திருப்பம் தான்.. விரைவில் மாநாடு.. காத்திருக்கு தமிழ்நாடு.. வா தலைவா..’ என்கின்ற விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தது.

ஆனால், இது விஜய் மக்கள் இயக்கம் தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டது, மேலும்ம் அவர்கள் தரப்பில், இந்த போஸ்டரை ஒட்டிய ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரசிகர் மன்றம் என்றும் அதில் அச்சிட பட்டிருந்த எதுவுமே, உண்மை இல்லை என்று தெளிவப்படுத்தினர்.

இதனை தொடர்ந்தும், சில சினிமா விமர்சகர்கள் நேர்காணல்களில் பிறந்த நாளன்று மாநாடு நடக்கும் அப்போது, லியோ திரைப்படத்தின் டீசர், பாடல்கள் வெளியிடப்படும் என தெரிவித்து வருகின்றனர். ஆனால், விஜய் தலைமையில் மாநாடு என்றால், விஜய்யின் மேலாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பார். இந்நிலையில், அது போன்ற தகவல் ஏதும் உண்மை இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?