ஜோசியர் பேச்சை கேட்டு அரசியலில் காய் நகர்த்தும் விஜய்… இதெல்லாம் சரிப்பட்டு வருமா?

Author: Shree
20 June 2023, 2:33 pm

நடிகர் விஜய் அரசியலுக்கு அடித்தளம் போட்டு அதன் வேளைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார்.

சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். 2 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த விழா மேடையில் அரசியல் சார்ந்த பல விஷயங்களை விஜய் பேசினார்.

இதுகுறித்த வீடியோக்கள் தான் கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இதையெல்லாம் சோசியர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் தான் விஜய் செய்துவருவதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆம், விஜய், திண்டிவனத்தில் இருக்கும் பெரிய ஜோதிடர் ஒருவரின் சொல்படி தான் அரசியல் சார்ந்த அனைத்தும் செய்கிறாராம்.

அந்த ஜோசியர் ஜெயலலிதா முதல் அதிமுக சம்மந்தமானவர்களுக்கு அவர் தான் அரசியலுக்கு நல்ல நேரங்களை கூறி வருகிறராம். அவர் சொல்லி தான் இந்த கல்வி விருது விழாவே நடந்ததாம். இனிமேலும் எதிர்கால அரசியல் குறித்த அனைத்தும் அந்த ஜோதிகர் மூலமாக தான் நடக்கும் என கூறப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 423

    0

    0