உலகில் அதிகமாக பயிரிடக்கூடிய தானியங்களுள் ஓட்ஸ் முக்கியமான ஒன்றாகும். இது காடை கன்னி, பல்லரிசி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் நமக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
100 கிராம் ஓட்ஸ் தானியத்தில் 15 கிராம் புரதம், 6 கிராம் கொழுப்பு , 60 கிராம் மாவுச் சத்து, 10 கிராம் நார்ச் சத்து போன்றவை அடங்கியுள்ளது. 100 கிராம் ஓட்சில் 350 கலோரிகள் உள்ளன. மேலும் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
நமது உணவில் ஓட்ஸ் தானியத்தை சேர்த்துக் கொள்வதால் நமது உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஓட்ஸ் சாப்பிடுவதால் நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதனால் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய் தொற்றுகள் தடுக்கப்படுகின்றன.
பீட்டா-குளுக்கன் என்ற ஊட்ட சத்து நியூட் ரோபில்களின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானதாகும். இந்த சத்தானது ஓட்ஸில் அதிக அளவு காணப்படுகிறது. அவை ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
அதிகப்படியான கொழுப்பு காரணமாக அதிக உடல் எடை கொண்டவர்கள் ஓட்ஸ் தானியத்தை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார் சத்துக்கள் உடலில் உள்ள LDL கெட்ட கொழுப்புகள் குறைக்கப்படுகிறது. அதிக அளவு கெட்ட கொழுப்பு இருப்பதால் நமது ரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து இரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால் இருதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மேலும் அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ஓட்ஸில் இருக்கக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடலின் செல்களில் இருக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் உடலில் சேரும்போது, அது பல்வேறு வகையான புற்றுநோயை ஏற்படுத்துகிறது. எனவே ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைக்கப்படுகிறது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.