பக்தி பாடலுக்கு நடுரோட்டில பரதநாட்டியம் ஆடிய மதுப்பிரியர் : வைரலாகும் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2023, 4:43 pm

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் நடுவே மது பிரியர் ஒருவர் மது போதையில் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேலம் செல்லும் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு மது பிரியர் ஒருவர் அளவுக்கு அதிகமான மது போதையில் சாமி பாடலுக்கு பரதநாட்டியம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வரும் சூழலில் மேலும் மது போதையில் மது பிரியர் செய்யும் ரகளை அப்பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

https://vimeo.com/837888295?share=copy

தொடர்ந்து குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையால் இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது இதனை தடுக்க குமாரபாளையம் போலீசார் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?