உறிஞ்சி இழுத்து மெதுவா விடுங்க சார் … அவருக்கு சொல்லிக்கொடுத்ததே நான்தான் – ஒப்பனா கூறிய லோகேஷ்!
Author: Shree20 June 2023, 6:12 pm
கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.
அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கிறார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இதில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் பிறந்தநாளில் நா ரெடி பாடல் வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் அதன் ப்ரோமோ வீடியோ வெளியானது. இ நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தை குறித்த பல சுவாரஸ்யமான விஷங்களை பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது லியோ படத்தில் கெளதம் மேனன் கோட் சூட் போட்டுக்கொண்டு ஸ்டைலாக தம் அடிக்கும் காட்சி குறித்து கேட்டதற்கு, அந்த சீன் எடுக்கும்போது கவுதம் மேனன் என்னிடம் வந்து, ‘எனக்கு தம் அடிக்க தெரியாது’ என்று சொன்னார். பின்னர் நான் தான் அவருக்கு தம் அடிக்க சொல்லிக்கொடுத்தேன். அதை பார்த்து அவர் லோகேஷ் ‘எப்படி இவ்வளவு பெர்ஃபக்ட்டா அடிக்கிற’ என்று கேட்டார். அதற்கு நான், ‘எல்லாம் உங்க காக்க காக்க படம் பார்த்து தான் சார்’ என்று சொன்னேன் என சிரித்துக்கொண்டே கூறினார். சர்ச்சையில் சிக்காமல் சாமர்த்தியமாக பேசுவதில் கூட லோகேஷ் திறமையானவர் தான் போல… !