இந்த நட்ஸ் சாப்பிட்டா முடி காடு மாதிரி வளர ஆரம்பிக்கும்!!!
Author: Hemalatha Ramkumar21 June 2023, 10:52 am
நட்ஸ் வகைகளில் நமது உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதோடு இது நமது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் அவசியம். தொடர்ந்து நட்ஸ் வகைகளை சாப்பிட்டு வரும் பொழுது தலைமுடி வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முடி உதிர்வதும் குறைகிறது. நட்ஸ் வகைகளில் பி வைட்டமின்கள் ஜிங்க் மற்றும் அத்யாவசியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்காத போது தான் முடி உதிர்வை ஏற்படுகிறது. ஆகவே நட்ஸ் வகைகளை சாப்பிடுவதன் மூலமாக இந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உடலுக்கு வழங்கி நீங்கள் முடி உதிர்வை திறம்பட குறைக்கலாம்.
அந்த வகையில் முடி உதிர்வை சமாளிக்க உதவும் ஒரு சில நட்ஸ் வகைகள் குறித்து இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு சிலருக்கு பாதாமை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் அதன் தோலை உரித்து சாப்பிடும் பழக்கம் உண்டு. இது முடி உதிர்வை சமாளிக்க உதவும் அற்புதமான ஒரு வழியாகும். பாதாமில் நல்ல அளவு வைட்டமின் ஈ காணப்படுகிறது. இது தலை முடி சேதமடைவதை தடுக்க உதவும் ஒரு வகை ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகும். அதோடு பாதாமில் காணப்படும் பயோட்டின் என்ற பி வைட்டமின் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஒரு நாளைக்கு ஒருவர் 15 முதல் 20 பாதாம் வரை சாப்பிடலாம். பாதாமில் கலோரிகள் அதிகமாகவும் கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை அதிகப்படியாக சாப்பிடுவது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் அலர்ஜி, செரிமான கோளாறு மற்றும் அல்சர் போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாதாம் பருப்பை அளவோடு சாப்பிடுவது அவசியம்.
வால்நட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் இது தலைமுடி வளர்ச்சியை அதிகரித்து அதனை அடர்த்தியாக மாற்ற உதவுகிறது. அடர்த்தியான தலைமுடியை விரும்புபவர்களுக்கு இந்த நட்ஸ் வகை சிறந்தது. மேலும் வால்நட்டில் வைட்டமின் ஈ உள்ளது. அதோடு செலினியம் என்ற ஆன்டி-ஆக்சிடன்ட் காணப்படுகிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு 6 முதல் 8 வால்நட்களை சாப்பிடலாம். வால்நட்களிலும் நல்ல அளவு கலோரிகள் மற்றும் கொழுப்பு சத்து உள்ளது. ஆகவே இதனை அதிக அளவில் சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான செலினியம் என்ற மினரல் பிரேசில் நட்ஸில் அதிகமாக உள்ளது. இது தலைமுடி சேதம் அடைவதை தடுத்து முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று பிரேசில் நட்ஸ் சாப்பிடுவது போதுமானது. இதனை அதிக அளவில் சாப்பிட்டால் குமட்டல், நகத்தில் நிறம் மாற்றம், நகம் அடிக்கடி உடைந்து போவதால் மற்றும் முடி உதிர்வு கூட ஏற்படலாம்.
முந்திரிப் பருப்பில் புரோட்டீன் மற்றும் சிங்க் காணப்படுவதால் இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு நபர் ஐந்து முதல் பத்து பாதாம் பருப்பு வரை சாப்பிடலாம். ஏனெனில் அதிகப்படியாக சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்தும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.