அம்மா வயசு பெண்களை கூடவா? சத்தியமா திருந்தவே மாட்டீங்கடா – கொந்தளித்த வாணி போஜன்!
Author: Shree22 June 2023, 9:55 am
சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். தற்போது இவர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சில ஆண்கள் குறித்து பேசிய அவர், நான் பஸ்சில் பயணிக்கும்போது சிக்கனில் வயசான பெண்களின் சேலை லைட்டா விலகி தெரிந்தால் அதை பின்னால் நிற்கும் 10 ஆண்கள் வெறிக்க வெறிக்க பார்ப்பார்கள். அவனையெல்லாம் பார்த்தாலே… டேய் நீங்களா திருந்தவே மாட்டிங்களாடா? என்று தான் தோன்றும் என கட்டமாக கூறினார்.