கேரளாவை விடாது துரத்தும் அடுத்தடுத்த படகு விபத்து.. மேலும் ஒரு கோர சம்பவம்… கதறும் குடும்பத்தினர்…!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 11:42 am

கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், தானூரை அடுத்த ஓட்டுப்புறம் தூவல் தீரம் பகுதியில், கடந்த மே மாதம் 8ம் தேதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 குழந்தைகள் உள்பட 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட, 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஒரு படகில் பயணம் மேற்கொண்டதால், பாரம் தாளாமல் இந்த விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக படகு உரிமையாளர் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோட்டயம் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர் உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் வைக்கம் நோக்கி படகில் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத் மற்றும் அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கேரளாவில் அடுத்தடுத்து படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Keerthy Suresh Take Language class for Varun Dhawan வருண் தவானுக்கு லவ் சொல்ல கற்றுக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் வீடியோ!
  • Views: - 441

    0

    0