அடேங்கப்பா நடிச்சதே ரெண்டு படம்.. கோடியில் புரளும் கவின் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?..

Author: Vignesh
22 June 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மக்களுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த கவின் லிப்ட் திரைப்படத்தில் நடித்து முகம் அறியப்பட்டார்.

அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். இந்த திரைப்படத்தை அவரின் கல்லூரி நண்பரான கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கினார்.

இதில் கவினுடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டாடா திரைப்படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி ஓடிடியிலும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் வாரி குவித்தது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கவினுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. ஒரு படத்துக்காக ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ. 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம்.

இதனடிப்படையில், கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தற்போது தெரிவிக்கின்றன. இதுதவிர கவின் சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 407

    1

    1