பாஜக பெண் ஆதரவாளர் கைதான விவகாரம் : சைபர் க்ரைம் போலீசாருக்கு அனுமதி அளித்தது நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2023, 3:38 pm

கோவையை சேர்ந்த பாஜக பெண் ஆதரவாளரான உமா கார்கி, சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதாக திமுக தொழில்நுட்ப அணி சார்பில் கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன் தினம் புகார் அளித்தனர்.

அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.இந்நிலையில் உமா கார்க்கியை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் அனுமதி கேட்டு கோவை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?