ஒருத்தர் கூட பண்ண அந்த தப்பு… காதல் டூ பிரேக் அப்.. ஷெரின் லவ் ஸ்டோரி..!
Author: Vignesh23 June 2023, 4:15 pm
ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் . ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் . அதன் பின் தமிழிலும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை .
பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் . நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது வலம் வர தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஷெரின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். மேலும், துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த போது தனக்கு சுத்தமாக தமிழ் தெரியாதாம் செல்வராகவன் தான் பொறுமையாக ஒவ்வொன்றாக கற்றுக் கொடுத்தாராம். அந்தப் படத்தில் நடிக்கும் போது தானும் தனுஷும் பதற்றம் ஆகவே இருந்தார்களாம்.
அதற்குப் பின் ஒரு சில படங்களில் நடித்து வந்ததாகவும், இடையில் தனக்கு பிக்பாஸ் வாய்ப்பு சீசன் ஒன்று மற்றும் இரண்டாவது சீசன்களில் தன்னை அணுகியதாகவும், அப்போது முடியாது என்று கூறிவிட்டாராம்.
ஷெரினை மீண்டும் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ள ஆணுகியதாகவும், அந்த நேரத்தில் தனது காதல் தோல்வியின் வருத்தத்தில் இருந்ததாகவும், தான் தனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்ததால், தினமும் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்ததாகவும், அதனை மறக்கவும் மன அழுத்தத்திலிருந்து வெளியேறவும், பிக்பாஸில் கலந்து கொண்டதாக ஷெரின் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டையை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.