பொன். மாணிக்கவேல் சென்ற கார் விபத்தில் சிக்கியது : பரபரப்பு வீடியோ… போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2023, 5:03 pm
திண்டிவனம் அருகே முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் கார் விபத்தில் சிக்கியது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டிவனம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் சென்றுகொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் செங்கல் ஏற்றி சென்ற மினி வேன் மீது கார் உரசியது.
இதில் கார் மட்டுமே சேதமடைந்த நிலையில், எந்தவித காயமும் இன்றி முன்னாள் காவல்துறை தலைவர் பொன் மாணிக்கவேல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் காவல் நிலைய போலீசார், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.