என் வாழ்க்கையை அழிச்சதே அஜித் தான் – உண்மையை உடைத்து பரபரப்பாக பேட்டியளித்த கனிகா..!

Author: Vignesh
23 June 2023, 6:15 pm

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

kanika-updatenews360

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

kanika-updatenews360

இந்தநிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற கனிகா வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்த பிறகுதான் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், இதற்கெல்லாம் அஜித்தின் வரலாறு படம் தான் காரணம் எனவும், அஜித் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் தனக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் வந்திருக்கும் என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1104

    29

    36