3 வேளை உணவுடன் உல்லாச விருந்து… நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் : தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் ‘குடும்ப விபச்சாரம்’..!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 10:00 pm

சென்னை நகரில் ‘குடும்ப விபசாரம்’ என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும்.

குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.

கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.

பின்னர் கோர்ட்டு மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்.

சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர்.

பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடும்ப விபசாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான தரகர்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!