உன்ன யாரு வாழ்த்த சொன்னா? விஜய் முகத்தை கேவலப்படுத்திய சனம் ஷெட்டி – வச்சி செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
24 June 2023, 9:52 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் என்ன தான் இயக்குனராக இருந்தாலும் அவரது உதவியால் சினிமாவில் நுழைந்தாலும் ஆரம்பத்தில் அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள், கேலி கிண்டல் எல்லாத்தையும் பார்த்து நொந்து சினிமாவை விட்டு ஓடிப்போய்விடலாம் என அழுதாராம். பிரபல பத்திரிக்கை ஒன்று நாளைய தீர்ப்பு படத்தில் விஜய் ஹீரோவாக கமிட்டாகி நடித்துக்கொண்டிருந்தபோது ” யாருடா இவன் லாரி டயர்ல மாட்டின தகர டப்பா மாதிரி மூஞ்சிய வச்சிட்டு இவனெல்லாம் நடிக்க வந்துட்டான் என மிகவும் மோசமாக கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்.

மேலும் விஜய்க்கு நடிக்கவே தெரியவில்லை என நிராகரிக்கப்பட்டராம். ஆனால், அந்த அவமானத்தை எல்லாம் பாடமாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என எல்லோரும் தங்களது வாழ்த்துக்களை கூறினார்கள். அந்தவகையில் நடிகை சனம் ஷெட்டி, விஜய்யின் உருவத்தை வரைத்து #leofirstlook என்ற ஹெஸ் டேக்கையும் குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்ஸ் அவரது ஓவியத்தை மிகவும் மோசமாக விமர்சித்து கிண்டல் அடித்தனர். சிலர் தயவுசெய்து இதை டெலீட் செய்துவிடுங்கள் என கூறினார்கள்.இன்னொரு முறை பென்சிலை கையில் எடுக்காதீர்கள் என்று கூறி திட்டித்தீர்த்துள்ளனர் ரசிகர்கள். எவ்வளவு தைரியம் இருந்தால் இதை லியோ பர்ஸ்ட் லுக் என்று சொல்வீர்கள் எஎன்றெல்லாம் கடுப்பாகி திட்டியுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுத்த அவர், ‘ என்ன மக்களே ஒரு ஸ்கெட்சுக்கே இவ்வளவு ரியாக்ஷனா, வைரல் ஆக்கிட்டீங்களே. ஸ்கெட்சுக்கே விஜய் சார் ரசிகையா இருந்து இந்த ட்ரோல்ஸ்க்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன். விஜய் எதிர்கொண்ட விஷயத்திற்கு முன்னாள் இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அனைத்து கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது. அதனால் அடுத்த ஸ்கெட்ச் வரை சில் பண்ணுங்க. இருப்பினும் என்னுடைய முயற்சியை பாராட்டியவர்களுக்கு நன்றி ‘ என்று பதிவிட்டுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 679

    0

    0