சைக்கோ மனநிலையில் பகத் பாசில்… கதறி அழுத நஸ்ரியா? என்ன ஆச்சு?

Author: Shree
24 June 2023, 11:27 am

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பஹத் பாசில் ஒரு முறை பாத்ரூமில் இருந்து பாயங்கரமாக கத்தியுள்ளார் . இதை கேட்டு அலறிடுது ஓடிய நஸ்ரியா உங்களுக்கு என்ன ஆச்சு என பதறிப்போய் கேட்டாராம்.

பின்னர் பெட் ரூமில் வந்தும் அப்படியே கத்தியிருக்கிறார். பின்னர் அமைதி படுத்தி என்ன என கேட்டபோது தான், ” நான் நடிக்கும் படத்தின் கேரக்டர் தான் இது” அதை நான் உளவாங்கி நடித்தால் அதில் இருந்து வெளியில் வரமுடியவில்லை என சொன்னாராம். பின்னர் நஸ்ரியா ஷூட்டிங்கில் இருந்து வீட்டிற்கு வந்தால் செருப்பை கழட்டிவிட்டு வருவது போல எல்லாத்தையும் வெளியவே விட்டுவிட்டு கணவராக மட்டும் உள்ளே வாங்க இல்லையெனில் நான் உங்களை Psychiatryயிடம் கொண்டுபோய்விட்டுவிட்டு மீடியாவில் வந்து நீங்கள் மனநிலை சரியில்லாதவர் என்று சொல்லிடுவேன் என கூறி மிரட்டினாராம். அதன் பிறகு நடிப்பதோடு அந்த கேரக்டரை விட்டுவிட்டு வீட்டுற்கு வருவாராம் பஹத்பாசில் .இதனை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • national award missed for paradesi movie because of bala video தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?