ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பிய ராணுவப் படை… அதிர்ச்சியில் அதிபர் புதின் ; ஆனந்தத்தில் பதிலடி கொடுத்த உக்ரைன் அதிபர்..!!

Author: Babu Lakshmanan
24 June 2023, 7:15 pm

ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை படையெடுத்து சென்றுள்ள சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்தது. தற்போது 15 மாதங்களுக்கு மேலாகவும் இந்தப் போர் நீடித்து வருகிற்து. இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக ‘வாக்னர்’ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால், இந்த ராணுவ குழு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது. இது ரஷ்யாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பானது பணத்தை பெற்றுக் கொண்டு, பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனக் கூறி, ரஷ்யாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த வாக்னர் அமைப்பு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

இது குறித்து பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “கூலிப்படை தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்திருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியிலிருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்போம். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கிளர்ச்சிக்கு காரணமானவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத தண்டனையை அனுபவிப்பார்கள்,” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், “அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம். ரஷியாவின் பலவீனம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உக்ரைனில் எத்தனை நாட்கள் தனது படைகளை வைத்துள்ளதோ, அவ்வளவு பெரிய பிரச்சினை ரஷியாவிற்கு ஏற்படும்”, என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!