நான் வாங்குற சம்பளத்துல பாதி T – நகர் கடைல தான்…. வாணி போஜன் இவ்வளவு simpleஅ?

Author: Shree
24 June 2023, 9:19 pm

சீரியல் நடிகையாக மக்கள் மனதை கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

vani bhojan-updatenews360

அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறார். தற்போது இவர் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் அணிந்திருக்கும் ஆடை அணிகலன்கள் விலை குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது தோடு – 600 ரூபாய்க்கு டீ நகர் கடைல வாங்கினேன், 3 லட்சம் மதிக்கத்தக்க வைரம் போன்று ஜொலிக்கும் இந்த மோதிரம் 600 ரூபாய்க்கு வாங்கினது தான். வாட்ச் ரூ. 30,000 என்றதும் தொகுப்பாளர் ஷாக் ஆனார். அதற்கு வாணி போஜன் அதற்கு நான் தகுதியானவள் தான். அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறேன். அதனால் வாங்குறேன்.. என்றார்.

vani bhojan-updatenews360

பின்னர் என்ன கார் வச்சிருக்கீங்க? என கேட்டதற்கு… நான் கார் விஷயத்தில் எல்லாம் ரொம்ப கஞ்சம்… தெய்வத்திருமகள் சீரியலில் நடித்த போது ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் இப்போவும் அதைத்தான் வச்சிருக்கேன். காரணம் அந்த கார் எனக்கு எந்த ஒரு விபத்தையோ தொந்தரவையோ கொடுக்கவில்லை லக்கி கார் என கூறினார். ஒரு ஹீரோயினாக வாணி போஜன் இவ்வளவு சிம்பிளாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வியந்துவிட்டார்கள்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 758

    0

    0