என்கிட்ட இருந்து விஜய் தப்பிச்சுட்டார்.. நெருக்கமான போட்டோவுடன் பிரபல நடிகை வெளியிட்ட ஷாக்கிங் பதிவு..!
Author: Rajesh25 June 2023, 4:00 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவரின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில் லியோ படத்தில் விஜய் பாடிய நான் ரெடி பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், விஜய் பிறந்தநாளுக்கு, அவரை அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் நடிகை லைலா. 2002ல் சூர்யா – லைலா நடிப்பில் வெளியான படம் உன்னை நினைத்து.
இப்படத்தில் முதலில் விஜய் நடிப்பதாக இருந்து சில காட்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் விஜய் திடீரென விலகவே சூர்யா அப்படத்தில் நடித்தார். அதன்பின் லைலா, விஜய்யுடன் இணைந்து நடிக்கவே வாய்ப்பில்லாமல் போனது. இதனால் லைலா அந்த பதிவில், விஜய் என்னிடம் இருந்து தப்பித்துவிட்டார் என கேப்ஷன் வைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறி அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.