நீயா நானாவில் மரணக்குத்து போட்ட மாரி செல்வராஜ்… வைரலாகும் வீடியோ!

Author: Shree
26 June 2023, 2:43 pm

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் கமலின் தேவர்மகன் படம் சாதி ஆதிக்கத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக கூறி கமல் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக்கினார். அப்போ நீ எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் எல்லாமே அப்படி எடுத்து தானே? என அவரை திட்டி தீர்த்தனர்.

மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் பாபநாசம் படத்தை ஒழுங்காக பார்க்காமலே அதை விமர்சித்தள்ள பழைய வீடியோ நெட்டிசன்ஸ் வச்சி செய்தனர். இப்படி தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் மாரி செல்வராஜ் இயக்குனர் ஆவதற்கு முன் நீயா நானா நிகழ்ச்சியில் மரண குத்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருது. பழைய வீடியோவான இது தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?