திராவிடர்களை “திராவிடியாஸ்னு” கூப்பிட்டவ தானே நீ…. கமல் கட்சியில் சேர்ந்த தன்னை விமர்சித்த கஸ்தூரிக்கு பதிலடி!

Author: Shree
26 June 2023, 8:10 pm

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குணசித்திர நடிகை வினோதினி தமிழில் ஏ. ஆர். முருகதாஸ் தயாரிப்பில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக புகழ் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது நடிகை வினோதினி கமல் ஹாசனின் மக்கள் நீதி மையக் கட்சியில் இணைந்து இருக்கிறார். மேலும், இது குறித்து வினோதினி பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். வினோதினி அவர், கடவுள் மற்றும் அந்நியானவாதி இதையே நடக்கும் கலந்துரையாடல் போல சித்தரித்து பதிவிட்டு இருக்கிறார். பின் அதில் ஏன் தான் பாஜக மற்றும் திமுகவில் இணையவில்லை என்பதை குறித்தும் கூறி இருக்கிறார். வினோதினி, கமல் கட்சியில் இணைந்ததை பலர் வரவேற்ற அதே கட்சியில் சில விமர்சனங்களும் எழுந்தது.

அந்த வகையில் சமீபத்தில் வினோதினி, பா ஜ க ஆதரவாளர் உமா கார்கி கைது குறித்து பதிவிட்டு இருந்தார். இதனை கேலி செய்த கஸ்தூரி ‘ நடிகர் கமல்ஹாசனின் கட்சியில் சேர்ந்தது ஏதோ சேவைக்கு என நினைத்தேன்..? இவங்க செய்யற வேலையை பாருங்களேன்.. உங்களுக்கு பிக் பாஸில் நல்ல எதிர்காலம் இருக்கிறது’ என்று நக்கல் அடித்து பதிவிட்டு இருந்தார்.

கஸ்தூரின் இந்த அப்பதிவிற்கு பதிலடி கொடுத்த வினோதினி, அந்தம்மா… அதுதான்… திராவிடர்களை திராவிடியாஸ்னு கூப்பிட்டு ட்விட்டர் வரலாறு படைத்த பெண்மணி… நான் ஏதோ சேவை செய்ய மய்யத்துல இணைஞ்சேனாம், ஆனா உமா கார்கி போன்ற தேச பக்தாள் போட்ட ட்வீட்டயெல்லாம் காண்பித்து அவாளுக்கு எதிரா வன்மம் பரப்புறேனாம்னு கதறினாரே… அம்மாடி.. நான் மக்களுக்கு சேவை செய்யப்போறேன்னு எப்போம்மா சொன்னேன்?

மக்களுக்கு கண் இனைக்காமல் சேவை செய்ய நான் என்ன நரேந்திரவா? (விவேகானந்தரச்சொன்னேன்). அவங்களுக்கு என்ன தேவையோ அதை அவங்க பார்த்துக்குவாங்க. எல்லாரும் மழுங்கடிக்கப்பட்ட மாட்டு மூளைக்கொண்டவங்க இல்ல. என்னோட/எங்களோட/பலரோட முயற்சி ஒண்ணே ஒண்ணுதான்… நான் பிறந்த ஹிந்து மதத்த வெச்சு கேவலமா கேம் ஆடுற ஒரு க்ரூப் இருக்கே… யாருன்னு என் வாயால ஏன் சொல்லணும்… அவங்கள… fill in the blanks… (இதை நான் ருத்ரம் சமகம் விஷ்ணு சஹஸ்ரநாமம் சௌந்தர்ய லஹிரி கந்த சஶ்டி கவசம் அனைத்தும் படிக்கும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அக்மார்க் ஹிந்துங்குற அடிப்படைலயே சொல்றேன்).

இதை செய்யுறதுக்கு மய்யத்துல இருக்கோமோ, மய்யத்து ஆபீஸ் வாசல்ல நிக்கிறோமோ, அறிவாலயத்துல இருக்கோமோ, 200 ரூ வாங்குறோமோ, கக்கூஸ் கழுவுறோமோ, எங்களுக்குள்ள அடிச்சிக்கிறோமோ, அதை நாங்க பார்த்துக்குறோம். நீங்கபோயி உங்க மதம் எப்படி எல்லா மதத்தவிடவும் சிறந்தது, பிரதமர் துவாபர யுகத்துல அமெரிகா சென்றிருந்தால் எப்படி புஸ்பகவிமானத்தில் சென்றிருப்பார்.

அன்றே சொன்னார் விசுவாமித்திரர் அப்படின்னு வாட்ஸாப் தகவல்கள ஷேர் பண்ணிட்டு, அடுத்த ஜென்ம புண்யத்துக்கு பூஜை புனஸ்காரத்துக்கு நடுவுல ட்விட்டர்ல ரெண்டு கெட்டவார்த்தைய கூசாம பேசிட்டு, ஒரு க்ளாஸ் கோமியம் குடித்துவிட்டு படுத்துத்தூங்குங்க. இன்றும் திராவிடர்களை திராவிடியாஸ் என்ற வார்த்தையைக்கொண்டு நீங்கள் அழைத்தது எவ்வளவு சாமர்த்தியமான வன்மச்செயல் மற்றும் வக்கிரத்தின் உச்சம் என்று நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஜெய் ஜக்கம்மா. (எல்லாரும் ஒண்ணு சொல்லுறாங்க, அதான் நானும்…) என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1882

    52

    12