பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 2வது இடம் பிடித்தும் வருத்தம் ; சாதனை படைத்த மாணவியின் நிறைவேறாமல் போன ஆசை..!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 9:03 pm

தர்மபுரி ; பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் மொரப்பூர் பகுதி மாணவி 2ம் இடம் பிடித்துள்ளார்.

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில், மாநில அளவில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த ஜடையம்பட்டியை சேரந்த மாணவி ஹரிணிகா, 200 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார். இவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு 597 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

மேலும், பொறியியல் கல்லூரி மாணவிகளின் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு பெற்றோர் மோகன்- திலகம் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சிகளை பரிமாறி கொண்டனர்.

மேலும், பள்ளிகள் அளவில் 12 ஆம் வகுப்பில் முதலிடமும், மாநில அளவில் 2-வது இடம் பெற்றுள்ள நிலையில், தற்பொழுது பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனக்கு ஊக்கம் அளித்த பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

எங்கள் குடும்பத்திற்கு எல்லாமே எனது தாத்தா தான். ஆனால் அவர் இப்போது இல்லை. இந்த சந்தோஷத்தை பார்ப்பதற்கு எனது தாத்தா இல்லை என்பது வருத்தமாக உள்ளதாக மாணவி ஹரிணிகா தெரிவித்தார்.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!