அர்ஜுனின் மருமகன் யாஷிகாவின் முன்னாள் காதலரா? காட்டுத்தீயாய் பரவும் கசமுசா போட்டோஸ்!
Author: Shree27 June 2023, 8:31 am
ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துவரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்துவருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி வைரலாகியது. மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.
இவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது என நீங்கள் கேட்கலாம், நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமைய்யா போட்டியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த செட்டிற்கு அடிக்கடி ஐஸ்வர்யா வந்துபோவதுண்டாம். அங்கு தான் இருவரும் நட்பு ஆரம்பித்து பின்னர் காதலாக மாறியுள்ளது. இது அர்ஜுனுக்கு தெரியவர ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் பின்னர் சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி மிகவும் நல்ல குணம் உடையவராக இருந்துள்ளார் அதை நம்பி தன் மகளை கட்டிக்கொடுக்க அர்ஜுன் ஓகே சொல்லிட்டாராம்.
ஆனால், தற்போது தற்போது அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. ஆம் உமாபதி ராமைய்யா அர்ஜுன் மகளை காதலிப்பதற்கு முன்னரே அடல்ட் நடிகையான யாஷிகா ஆனந்தத்தை காதலித்து வந்தாராம். அவர்களின் நெருக்கமான அவுட்டிங், டேட்டிங், பர்த்டே பார்ட்டி புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வருகிறது.
இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ், நல்ல பசங்க ஊருக்குள்ள நிறைய பேர் இருக்கும்போது இந்த அப்பாக்களுக்கு கேடி, முள்ளமாரி, ,முடிச்சவுக்கி பசங்களையா தேடி பிடிச்சு அழகான பொண்ணை கட்டிக்கொடுத்து அசிங்கப்படுத்துறீங்களே அர்ஜுன் சார்… என ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளனர். உமாபதி ராமையா, யாஷிகா இருவரும் இணைந்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.