திருடச் சென்ற இடத்தில் கஞ்சா போதையில் உளறிய ஆசாமி… கொலை வழக்கில் சிக்கிய நண்பர்கள் ; காஞ்சியில் நடந்த சைலண்ட் மர்டர்..!!

Author: Babu Lakshmanan
27 June 2023, 9:33 am

காஞ்சிபுரத்தை அடுத்த ஏகனாம்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பனின் மகன் சீனிவாசன்(25).இவருக்கு நாகவள்ளி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கஞ்சா போதைக்கு சீனிவாசன் அடிமையானதால் சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்குமிடையே கருத்து ஏற்பட்டு நாகவள்ளி பிரிந்து சொன்னையிலுள்ள தாயார் வீட்டில் இருந்து வருகிறார். ஆனாலும், தனது கணவருடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில், சீனிவாசன் தனது சக வயது நண்பர்களான வெண்குடியை சேர்ந்த இளையராஜா, கிதிரிப்பேட்டையை சேர்ந்த தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் மூன்று பேர் மீது வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஆனால், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு முதல் சீனிவாசனை அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது 4 மாதங்களாக சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையெடுத்து, காஞ்சிபுரம் வந்து எங்கு வந்து பார்த்தும் காணாததால் வாலாஜாபாத் காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாகவள்ளி புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஏகனாபேட்டையிலுள்ள ஓர் வீட்டில் கஞ்சா போதையில் தகராறு செய்தவனை வாலாஜாபாத் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு போது, என்னுடைய நண்பர்கள் இருவர் சேர்ந்து சீனிவாசன் என்ற நபரை கொன்று ஊத்துக்காடு ஏரியில் புதைத்து விட்டார்கள். அதை போய் கண்டு பிடியுங்கள், என கஞ்சா போதையில் உளறிகொட்டினார்.

இவர் அளித்த தகவலை தொடர்ந்து வாலாஜாபாத் காவல் துறையினர் வெண்குடி பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரை பிடித்து கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்ட போது, தன் நண்பர் தினேஷ் உடன் சேர்ந்து சீனிவாசனை கொன்ற விஷயத்தை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர்சீசர் தலைமையில் வாலாஜாபாத் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் ஊத்துக்காடு ஏரியில் சீனிவாசனை எலுப்புகூடாக கண்டறிந்தனர்.

இதனைதொடர்ந்து, கிதிரிப்பேட்டையை சேர்ந்த தினேஷ் என்பவனை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், எலும்புக்கூடு கண்டறியப்பட்ட இடத்தில் எலும்பியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி நாகவள்ளி புகார் அளித்து தற்போது வரை அவ்வழக்கு தொடர்பாக நிலுவையில் இருந்துவரும் நிலையில் தான் அஜித் என்பவன் தனது நண்பர்கள் கொலை செய்த விஷயத்தை போதையில் உளறிகொட்டியதை வைத்து ஒன்பது மாதமாக கண்டறியப்படாமல் இருந்த விஷயம் வெளிச்சத்திற்கு தற்போது வந்ததுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 369

    0

    0