பொன்னம்பலத்துக்கு உதவாத அஜித்?.. ஷாலினி செய்த உதவி.. உண்மையை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
27 June 2023, 11:45 am

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வருபவர் அஜித். அவரைப் பற்றியும் அவரது நல்ல குணங்களைப் பற்றியும் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி நடிகர் பொன்னம்பலம் சித்ரா லட்சுமணன் பேட்டியில் பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அஜித் ஒரு சப்போர்ட்டும் இல்லாமல் திரை உலகிற்கு வந்தவர். ஒருமுறை தன் நண்பருக்கு பணம் தேவைப்பட்டதாகவும், அவர் பையனுக்கு உடம்பு சரியில்லை என்று தன்னிடம் கேட்ட நிலையில், 56 ஆயிரம் ரூபாயை ஒரே நாளில் தேவைப்பட்டது.

Ponnambalam-updatenews360

உடனே இது பற்றி அஜித்திடம் கூறியதாகவும், பணம் கட்டணும் என்று சொல்லிவிட்டு பல விஷயங்களை கேட்டு விட்டு ஷூட்டிங்கிற்கு அஜித் சென்று விட்டதால் லஞ்ச் டைமில் சாப்பிடும்போது அஜித்திற்கு பொன்னம்பலம் ஞாபகப்படுத்தியதாகவும், அப்போது தன்னிடம் அண்ணன் 11 மணிக்கு ஷாலினி காசு கட்டிட்டாங்க என்று அஜித் கூறியதும், நல்லா இருப்பா நீ சூப்பர் ஸ்டார் இல்லையோ சூப்பர் ஸ்டாருக்கு மேல ஒரு பேர் இருக்கும்னு அப்பவே பொன்னம்பலம் அஜித்திடம் கூறியதாக பேட்டியில் மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

ajith ponnambalam-updatenews360

மேலும், இது இப்படி இருக்கும் போது, தனக்கும் அஜித்துக்கும் பிரச்சனை உதவி கேட்டேன் அவர் செய்யவில்லை என கதைகட்டி விடுறாங்க என்றும், அவர் தன்னை பார்க்காததற்கு அவர் அப்பா உடம்பு சரியில்லை என்று அதன்பின்னர் தான் தனக்கு தெரிந்ததாகவும், பேட்டியில் கூறியுள்ளார் பொன்னம்பலம் .

மேலும், பலருக்கு தெரியாமல் அதுவும் மேக்கப் உதவியாளர்களுக்கு கூட வீடு கட்டிக் கொடுத்திருப்பதாக அஜித்தின் நல்ல குணங்களை பேட்டியில் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

  • sun pictures released the announcement of magnum opus which is atlee allu arjun project சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?