அதே டெய்லர்.. அதே வாடகை.. சேம் பிஞ்ச் பண்ணும்..- Leo Dancers Vs Kanguva பாடல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
27 June 2023, 12:45 pm

சூர்யாவின் அடுத்த படமான கங்குவாவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக சென்னையில் செட்டு போட்டு பாடல் சூட்டிங் எடுக்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

ஸ்டுடியோ கிரீன்ஸ் பெரும் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். பத்து மொழிகளில் வெளியாகும் இந்த கங்குவா படம் சரித்திர கால கதையாக உருவாகி இருக்கிறது.

kanguva -updatenews360

இதில் திஷா பதானி கதாநாயக நடிக்கிறார். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் பெயர் பெரும் வரவேற்பை பெற்றாலும் கங்குவா படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும், முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் இல் இரண்டாவது பாகத்திற்கான லீட் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பரில் படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடம் தொடக்கத்தில் முதல் பாகம் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

kanguva -updatenews360

கொடைக்கானலில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னையில் அடுத்தகட்ட சூட்டிங் நடத்தப்படும் என தகவல்கள் வெளியானது. அதன்படி, இப்போது சென்னைக்கு அருகில் பிரம்மாண்ட செட் போட்டு பாடல் காட்சி ஒன்றை படமாக்கப்பட திட்டமிட்டு இருப்பதால், அந்த பாடலில் 1500 நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

kanguva -updatenews360

இதற்கிடையே, விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துவரும் LEO படத்தில் நான் ரெடி என்ற பாடல் இடம் பெற்றிருக்கிறது. அந்த பாடலில் விஜயுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆடி இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இப்போது கங்குவாவிலும் 1500 டான்சர்கள் ஆட இருப்பதாக கூறப்படுப்படுவதால், லியோவுக்கு கங்குவா டஃப் கொடுக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leo -updatenews360

இந்நிலையில், இந்த இரண்டு பாட்டிற்கும் நடன கலைஞர்கள் ஒரே விதமான உடை அணிந்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியான நிலையில், இருதரப்பு ரசிகர்களும் அதே வாடகை அதே டைலர் என கலாய்த்து கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.

.

  • Adult Comedy Movie Perusu First Day Collection பெருசு படத்திற்கு இவ்வளவு மவுசா? முதல் நாளே பட்டையை கிளப்பிய வசூல்!