பெற்ற மகனால் வந்த வினை… விரக்தியில் தம்பதி எடுத்த முடிவு : பறிபோன உயிர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 8:46 pm

திருப்பூர் எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் (60). இவரது மனைவி அமலோற்பவமேரி (48). தம்பதியருக்கு மகன் சார்லஸ். இவர் பனியன் நிறுவனம் நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் ரூ. 15 லட்சம் வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

சார்லஸிடம் கடன் கொடுத்தவர்கள், பணம் கேட்க அவர் திருப்பூர் மாநகரின் வேறு பகுதியில் குடியேறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சார்லஸிடம் பணம் கொடுத்தவர்கள் அவர்களது பெற்றோரிடம் பணம் கேட்டு நச்சரிக்கவே, இருவரும் ஒருகட்டத்தில் விரக்தி அடைந்தனர்.

இந்நிலையில் தம்பதியர் விஷம் அருந்தியதாக தெரிகிறது. இதனை அலைபேசி வழியாக மகனுக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விஷம் அருந்திய நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமலோற்பவமேரி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 460

    0

    0