அந்த பழக்கத்திற்கு அடிமையான பிரியா பவானி சங்கர்..- அவரே வெளியிட்ட உண்மை..!
Author: Vignesh28 June 2023, 12:00 pm
சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிறகு சின்னத்திரை சீரியல் கதாநாயகியாக நடித்து சினிமா பயணத்தை தொடங்கி தற்போது ஜொலித்து வருகிறார்.

இவர் முதலாவதாக மேயாத மான் படத்தின் மூலமாகத்தான் கதாநாயகியாக, சினிமா துறையில் அறிமுகமானார். அந்த படத்திற்குப் பிறகு அகிலன் படத்தில் ஜெயம் ரவியுடனும், 10 தல படத்தில் சிம்புவுடனும், ருத்ரன் படத்தில் ராகவா லாரன்ஸ் உடனும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று அடுத்தடுத்து வெற்றி பெற்றார்.
எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படம் அதனைத் தொடர்ந்து பொம்மை என்ற படத்தில் இரண்டாவது முறையாக அவருக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது சினிமாவில் மட்டுமல்லாமல் பிசினஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் லியன்ஸ் டைனர் என்ற ஹோட்டலை சமீபத்தில் சென்னையில் திறந்திருக்கிறார். இந்த ஓட்டலை அவர் தனது காதலனுக்காக தான் துவங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது சிங்கிளாக தான் சுற்றி வருகிறார்.
இதனிடையே, நிகழ்ச்சி ஒன்றிக்கு வந்திருந்த பிரியா பவானி சங்கரிடம், எதற்கு நீங்கள் அடிமை என்ற கேள்விக்கு, சாப்பாடுக்கு தான் அடிமை என்று தெவித்துள்ளார். மேலும், பலவித சாப்பாட்டுக்களை தேடி பார்த்து சாப்பிட்டு இருப்பதாகவும், பிரியாணி தான் சூப்பர் ஸ்டார் உணவாக இருப்பபதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.