ஆளுநரை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பேச்சாளர்… திமுக கூட்ட மேடையில் ஒருமையில் பேசியதால் மீண்டும் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 11:32 am

கரூரில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் ஐ.டி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை வேட்டை நாய் என்றும், கவர்னரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக பேச்சாளர் சைதை சாதிக் ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர்கள் நாஞ்சில் சம்பத் மற்றும் சைதை சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

அப்போது உரையாற்றிய சைதை சாதிக் கூறியதாவது :- அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படும் அமைப்புகளை வைத்து திமுகவை மிரட்டி பார்க்க நினைக்கிறார்கள். இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்திய போது, அதை எதிர்த்து நின்றவர் கருணாநிதி. அவர் வழிவந்த மு.க.ஸ்டாலின் மற்ற மாநில முதல்வர்களை போல் ரெய்டுகளை கண்டு பயப்படாமல் மோடியை எதிர்த்துப் பேசக்கூடியவர்.

செந்தில் பாலாஜி மீது வைத்திருந்த பாசமும், நம்பிக்கையும் காரணமாக அவரை கைது செய்த மூன்று மணி நேரத்தில் நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என்று பேசினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏன் எல்லா வேட்டை நாய்களையும் (IT மற்றும் ED அதிகாரிகளை குறிப்பிடுகிறார்) விடுகிறார்கள். செந்தில் பாலாஜி ஏன் முடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர் வெளியே இருந்தால் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்காக 10 தொகுதிகளை வெற்றி அடைய செய்வார். மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கிகளுக்கு மூளை வேலை செய்யாது என்று மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

செந்தில் பாலாஜியை முடக்க பார்த்தார்கள். ஆனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தாலும், அவர் கண்காணிப்பில் கரூரில் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முன்மொழிந்து கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கவர்னர் (அவன் என்றும், போடா மயிறு என்றும் தரக்குறைவான வார்த்தைகளால் கவர்னரை ஒருமையில் பேச்சு) மத்திய அரசுக்காக இங்கிருக்கும் ஏஜென்ட். செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என்று கவர்னர் கூறினார். செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது, எனக் கூறினார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…