வைரமுத்து தன்னோடு பயணிப்பவர்களை பாராட்டியதே இல்லை.. – பிரபல பாடலாசிரியர் ஆதங்கம்..!
Author: Vignesh28 June 2023, 8:00 pm
தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயில் அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.
இந்நிலையில், பிரபல பாடலாசிரியர் சினேகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வைரமுத்து பற்றி விமர்சித்திருக்கிறார். அதில் என்னை பொருத்தவரைக்கும் பலவீனமும் அவர்தான் பலமும் அவர் தான் தனக்குத் தெரிந்து. அதிகமான கவிஞர்களை மனம் விட்டு வைரமுத்து பாராட்டியது இல்லை என்று நினைக்கிறேன் எனவும், அதுதான் அவரது பலவீனம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கவிதையில் நான் மட்டும்தான் என்று இருக்கும் அழுத்தம் இருக்கிறது. அதை நானே ஆதரவு செய்கிறேன். தன்னை மிஞ்சி ஒன்றுமில்லை என்பதுதான் அவரை ஆகாயத்தில் கொண்டு சென்றிருக்கிறது என சினேகன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
மேலும், வெளிநாடு புத்தகத்தில் இருக்கும் கவிதைகளை பாராட்டும் அவர் தன்னோடு பயணிப்பவர்களை என்றுமே பாராட்டியது இல்லை. அது வாய்வார்த்தையாகவே போய்விடும் என்றும், ஒரு போட்டியாளர்களை சமமாக நினைத்து போட்டியிடும் களத்தில் அமைத்துக் கொடுக்காதது பலவீனம் தான் என்று சினேகன் சித்ரா லக்ஷ்மணன் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.