பார் உரிமையாளர்களை மிரட்டி ஓசி பணம் வசூலிக்கும் உனக்கு இதெல்லாம் தேவையா? கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..!

Author: Vignesh
29 June 2023, 7:00 pm

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

இதற்கிடையே, ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்த நாளான்று லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. பாடல் வெளியான சில நிமிடங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனையை படைத்தது. மேலும் நா ரெடி பாடல் போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ‘லியோ’படத்தின் ‘நா ரெடி தான் வரவா’பாடல், போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இருப்பதாக, சமுக ஆர்வலர், அனைத்து மக்கள் அரசியல் கட்சியி தலைவரான ராஜேஸ்வரி பிரியா விஜய்யை விமர்சித்து பேசியதோடு புகாரும் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பாடலில் புகைபிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வசனத்தை பட குழுவினர் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் புகார் அளித்து விஜய்யை விமர்சித்த ராஜேஸ்வரி பிரியா மீது நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதாவது ராஜேஸ்வரி பிரியாவின் முழு நேர வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்துவது தானாம். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் பார் உரிமையாளர் ஜான் என்பவரிடம் கூட்டினைந்து பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரித்த டாஸ்மாக் அதிகாரிகள் அதை உறுதி செய்து கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் ராஜேஸ்வரி பிரியாவை கடுமையாக கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!