சளி பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுமிக்கு நாய்க்கடி ஊசி : அரசு மருத்துவமனையில் அலட்சியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 3:54 pm

சளி பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்துக்கொண் சிறுமி நாய்க்கடி ஊசி : அரசு மருத்துவமனையில் அலட்சியம்!!

கடலூர் அரசு மருத்துவமனையில் சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சளிப் பிரச்சனைக்காக வந்த சிறுமிக்கு சிகிச்சை செய்த மருத்துவர், மாத்திரை சீட்டை எழுதி செவிலியரிடம் கொடுத்துள்ளார். சீட்டை வாங்கி செவிலியர் பார்க்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூராடுகிறது.

நாய்க்கடி ஊசி போடப்பட்டதால் மயங்கி விழுந்த சிறுமி உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலட்சியமாக செயல்பட்ட செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் சளி பிரச்னைக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்