வீட்டிற்குள் தாழிட்டு தீ வைத்துக்கொண்ட இளைஞர்… திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2023, 4:33 pm

திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் சேர்ந்தவர் தெய்வசிகாமணி யசோதா தம்பதியினர் இவர்களுக்கு கோகுல் (29) தினேஷ் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்து ஒன்றில் பாலசுப்பிரமணியம் இறந்துவிட்டார். மேலும் கடந்த ஆண்டு யசோதா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த கோகுல், தினேஷ் ஆகியோரை அவர்களது பாட்டி வள்ளியம்மாள் குமார் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கவனித்து வந்தார். பெற்றோர் இறந்த நிலையில் கோகுல் தினேஷ் ஆகிய இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறும் நடந்து வந்துள்ளது. இதில் அவர்கள் தங்கி இருந்த வீட்டை அவ்வப்போது சேதப்படுத்தி வந்துள்ளனர்.


இந்த நிலையில் இன்று மதியம் வள்ளியம்மாள் அருகிலுள்ள கோவிலுக்கு சென்ற நிலையில் கோகுல் தினேஷ் ஆகிய இருவருக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது தினேஷ் கோகுலை அடித்து விரட்டி விட்டு வீட்டிற்கு உள்ளே சென்று கதவை பூட்டி வீட்டுக்கு தீ வைத்துள்ளார்.

இதைப் பார்த்த கோகுல் சத்தம் போட்டு உள்ளார். மேலும் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அனைத்து வீட்டிற்குள் இருந்த தினேஷை மீட்டனர். பெற்றோர் இறந்த சோகத்தில் மன உளைச்சலில் என்ன செய்வதென்று அறியாமல் வீட்டுக்கு தீ வைத்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 469

    0

    0