அரை நிர்வாணத்துடன் பெண்களுக்கு கொலை மிரட்டல்… இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிர்வாகி மீது புகார் ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 11:41 am

அரை நிர்வாணத்துடன் மண்வெட்டியை கொண்டு பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். கூலி வேலை செய்து வருகிறார். மாரியம்மாள் கணவரை பிரிந்த நிலையில், அவர் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவரது மகளின் இருசக்கர வாகனத்தில் அம்பேத்கர், பெரியார் புகைப்படமும் ஒட்டி உள்ளார். அதை பார்த்து கடந்த 6 மாதத்திற்கு முன் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவன தலைவர் LOTUS மணிகண்டன் மிரட்டி உள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு செல்லும் வழியில் மணிகண்டன் அவரை பார்த்து, காரித் துப்பி மண்வெட்டியை வைத்து இதுபோன்று உன்னையும் கொத்தி விடுவேன் என்று கூறி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. உடனே அருகில் இருத்த பெட்டிகடையில் போன் வாங்கி தன் மகளிடம் கூறி உள்ளார். உடனே அவர் மகள் அங்கு வந்து உள்ளார்.

அவரையும் பார்த்து காரி உமிழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்து கேட்டவுடன் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அதை கைபேசியில் வீடியோ எடுக்கவே, அதை நான் பார்த்து கொள்கிறேன் எனது பின்புலம் தெரியாமல் இருக்கின்றீர்கள் என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, அவர்கள் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். மேலும், அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்த செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 380

    0

    0