“இது அம்மாவுக்கு கிடைத்த வெற்றி” – ரியல் “மாமன்னன்” இந்த பிரபல அரசியல்வாதியா!

Author: Shree
30 June 2023, 1:44 pm

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து நேற்று வெளியான திரைப்படம் மாமன்னன். இப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார்கள். தலித் இனத்தவர்களின் இடஒதுக்கீடு பற்றி பவர்ஃபுல் அரசியல் பேசும் இப்படத்தில் மாமன்னனாக நடித்திருக்கும் வடிவேலு கதாபாத்திரத்திரம் பிரபல அரசியல்வாதி தான் என செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், இப்படம் முன்னாள் சபாநாயகர் தனபால் அவர்களை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் சபாநாயகர் தனபால், “மாமன்னன் திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை. எனக்கு நிறைய பேர் போன் பண்ணி உங்களை குறித்து தான் படம் உள்ளது என சொன்னார்கள். நான் 1972-ல் இருந்து நான் அதிமுகவில் இருக்கிறேன். அம்மாவின் தீவிர விசுவாசி நான். என்னுடைய உழைப்பைப் பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர், அமைச்சர், சபாநாயகர் என பொறுப்புக் கொடுத்து அழகு பார்த்தார்கள். என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்து வெற்றி என்று கூறினார்.

இது குறித்து படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜிடம், “வடிவேலு உடைய கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலினை ஓத்து போகிறாதா? என்று கேட்டதற்கு அதனை மக்கள் தான் முடிவு செய்வார்கள் என கூறி இருக்கிறார். தற்போது மாரி செல்வராஜின் இந்த பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரியல் மாமன்னன் என கூறப்படும் டி தனபாலின் அரசியல் பயணம் குறித்து பலர் ஆராய்ந்து வருகிறார்கள்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 504

    0

    0