ஒரு லிப் லாக் தான்.. பட வாய்ப்புகளை இழந்து மூட்டையை கட்டிய கனவு கன்னி..!

Author: Vignesh
1 July 2023, 5:30 pm

80, 90 களில் இளசுகளின் கனவு கன்னியாக ஜொலித்தவர் ரேவதி. இவர் 1983 ஆம் ஆண்டு வெளியான மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

punnagai mannan - updatenews360

இதனிடையே, கமல் நடிப்பில் 1886 ஆம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரேகா நடித்திருந்தார்.

புன்னகை மன்னன் திரைப்படத்தை இந்த காலகட்டத்திலும் பலராலும் ரசிக்க படுகிறது. இந்த படத்தில் ஒரு நடன கலைஞர் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களும், கஷ்டத்தை குறித்து மிகவும் அழகாக கூறியிருப்பார்கள்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் படத்தில் கமலும், ரேவதியும் சேர்ந்து நடனமாடும் காட்சியை எடுத்து கொண்டிருக்கும் போது, கமலின் நடனத்திற்கு ரேவதியால் ஈடு கொடுக்க முடியவில்லையாம்.

முன்னதாக, ரேகாவின் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க வந்தது ரேவதிதானாம். ஆனால், அந்த ரோலில் முத்தக்காட்சி இருப்பதால் ரேவதி நோ சொல்லி அந்த கதாபாத்திரத்தை தவிர்த்து விட்டாராம்.

punnagai mannan - updatenews360

புன்னகை மன்னன் படம் வெளியான பிறகு ரேகா நடித்திருந்த கதாபாத்திரம் தான் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. அப்போது ரேவதி இந்த கதாபாத்திரத்தை இழந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாக பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த சமயத்தில் ரேகாவுக்கு அதிக பட வாய்ப்பு வந்ததாகவும், ரேவதிக்கு போதிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ