மணிவண்ணனின் தங்க மனசு… ஷூட்டிங் ஸ்பாட் சம்பவத்தை கூறி நெகிழ்ந்த பிரபல இயக்குனர்!

Author: Shree
1 July 2023, 3:20 pm

தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகரும், இயக்குநரும், தமிழுணர்வாளரும் ஆன மணிவண்ணன் 400கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 50 திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். 1978ல் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட இவர், பாரதிராஜாவின் உதவியாளராக சினிமா பணியை துவங்கினார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் , சத்யராஜ், கார்த்திக், மோகன், மாதவன், விஜய், அஜித் குமார், சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் மணிவண்ணன் பிளாஷ்பேக் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் பிரபல இயக்குனரான ஆர்கே செல்வமணி மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தான் பின்னர் இயக்குனர் ஆனார். மணிவண்ணிடம் வேலை பார்த்த போது ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென… செல்வமணி இங்க வாப்பா…இந்த சீன் நீ எடு என உதவி இயக்குனராக மொத்தமாக நம்பி பெரிய வேலையை ஒப்படைப்பார். அந்த அளவுக்கு வளர்ந்து வரும் திறமைசாலிகளை வளர்த்துவிட்டவர் மணிவண்ணன். இன்று இருக்கும் எந்த இயக்குனரும் அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என அவரே பேட்டி ஒன்றில் கூறியதாக பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறி தகவலை பகிர்ந்துள்ளார்.

  • pa ranjith in the discussion of directing palwankar baloo biopic பிரபல கிரிக்கெட் வீரரின் பயோபிக்கை இயக்கும் பா.ரஞ்சித்? ஆச்சரிய தகவல்