கட்டுப்பாட்டை இழந்த கார்.. 50 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 3:27 pm

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள போர்கேடி மேம்பாலத்தில் இருந்து இன்று காலை வேகமாக சென்றுகொண்டிருந்த வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கீழே 50 அடி உயரத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. விபத்து காரணமாக காரில் பயணம் செய்த குறைந்தது 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கார் கட்டுப்பாட்டை இழந்து கீழே ரயில் தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அந்த சமயம் அப்பகுதியில் ரயில் எதுவும் வரவில்லாத காரணத்தால் பெரிய விபத்துக்கான சம்பவம் தவிர்க்கப்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்து கார் 50 அடி உயரத்தில் இருந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!