விஜய சாட்சியா வச்சு 2-வது கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. பகீர் கிளப்பிய எஸ்.ஏ.சி..!

Author: Vignesh
3 July 2023, 12:30 pm

எஸ் எஸ் சி நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் எழுத்தாளர் என பல பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டவர். சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக இவரை இயக்குனராக ஜொலிக்க வைத்தது.

vijay sac-updatenews360

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

Vijay - Updatenews360

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற எஸ்.ஏ சந்திரசேகர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், அவர் தான் சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருமே வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாங்கள் நடிகர் சிவாஜியின் துணைவியார் தலைமையில், திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் சில வருடங்கள் கழித்து தன்னிடம் தன் மனைவி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருப்பதாக கூறியதால், சரி என்று தானும், இதற்கு சம்மதம் தெரிவித்து சோபாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டேன். இதற்கு விஜய் தான் சாட்சியாக இருந்தார் என்று எஸ் எஸ் சி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

vijay sac-updatenews360
  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 293

    0

    0