யாரு சொன்னது? சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் இல்ல… சர்ச்சை இயக்குனர் மிஷ்கின் பேச்சு!

Author: Shree
3 July 2023, 10:47 am

தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளினியான இயக்குனர் மிஷ்கின் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கி நல்ல அடையாளத்தை பெற்றார். 2006 ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தடம் பதித்தார். முதல் படத்திலேயே மிப்பெரிய அளவில் பெயரையும் புகழையும் சம்பாதித்தார்.

அதை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனிடையே சிலதிரைப்படங்களில் அழுத்தமான ரோல்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தில் நடித்துள்ளார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் , அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் என பலரும் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளில் சிக்கி வரும் இயக்குனர் மிஷ்கின் சமீப காலமாக சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை பல விழா மேடைகளில் விமர்சிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களை ஒருமையில் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்துவார்.

அந்தவகையில் தற்போது மாவீரன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின் “சிவகார்த்திகேயன் ரஜினி மாதிரியெல்லாம் அல்ல, ரஜினியேதான்” என தன் வழக்கத்திற்கு மாறாக புகழ்ந்து பேசி மேடையில் இருப்பவர்களை ஆச்சர்யப்படுத்திவிட்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ