எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு… பிதட்ட ஆரம்பித்து விட்ட பாஜக ; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்தரசன் விமர்சனம்..!!!
Author: Babu Lakshmanan3 July 2023, 1:10 pm
திருச்சி ;எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பை பார்த்து பாஜக பிதட்ட ஆரம்பித்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2024 ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற கூடாது. அதற்குரிய முன் முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்து வருகிறது. பாட்னாவில் முதல் கூட்டம் நடைபெற்றது. ஜூலை மாதத்தில் இரண்டாவது கூட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய அரசு காய்கறி மற்றும் உணவு பொருட்களை விலை அதிகரிப்பு பற்றி எல்லாம் பேசுவது கிடையாது. கடந்த 2014 ஆண்டு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றவில்லை.
மே மாதம் முதல் மணிப்பூரில் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. காவல் நிலையங்களில் இருந்த துப்பாக்கிகள் பறித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இதுவரை பிரதமர் வாய் திறந்து பேசவில்லை. நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் முயற்சி எடுக்கவில்லை. 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5000க்கு மேல் பொதுமக்கள் காயம் பட்டு உள்ளனர். ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் அகதிகள் போல இடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவைகள் குறித்து வாய் திறந்து பேசாத மோடி குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசி வருகிறார். மணிப்பூர் மக்கள் மத்தியில் மோதல்களை உருவாக்கும் ஒரு மோசமான நடவடிக்கை பிரதமர் கொண்டு வருகிறார். மதரீதியாக, ஜாதி ரீதியாக பிரச்சினையை மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலமாக தங்களுடைய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
பாஜக ஆட்சி நடத்தாத மாநிலங்களில் பாஜகவின் கொள்கைக்கு எதிராக பேசுகிற தமிழகத்தை போல் உள்ள மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு போட்டி அரசு நடத்துகிறார். தமிழக கவர்னர் தொடக்கத்திலிருந்து ஆளுநர் வேலை பார்க்கவில்லை. அதற்கு மாறாக வேறு பல வேலைகளில் கவனம் செலுத்துகிறார். போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார்.
மாநிலத்தில் அரசியல் சட்டப்படி அமைச்சர்கள் நியமிக்கவும், மாற்றவும் முதலமைச்சருக்கு தான் அதிகாரம் உண்டு. ஆனால் தமிழகத்தில் பொறுப்புக்களை மாற்றி வழங்கும் போதும் ஏற்க மறுத்தும், செந்தில் பாலாஜி விவாகரத்தில் நீக்க வேண்டும் என்று சொன்னவர், மீண்டும் ஐந்து மணி நேரம் கழித்து அதனை நிறுத்தி வைக்கிறேன் என்று கூறுகிறார்.காலையில் 6:00 மணிக்கு ஒரு செய்தி, 11 மணி செய்தி என்று குழப்பமான நிலைகளை உருவாக்கி போட்டி அரசாங்கத்தின் மூலம் தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
இவரை குறித்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசு தலைவருக்கு புகார் கொடுத்து எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. ஆளுநர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது திரும்ப பெற வேண்டும்.
இல்லையென்றால், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த எதிர்ப்புக்கும் ஆளாக வேண்டிய நிலைமை ஏற்படும். ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. அந்த பதவியை நீக்க வேண்டும் என முதல்வரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில் விபத்தில் சாமியார்கள் இறந்து போனார்கள். அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய கொல்லப்பட்டார்கள். சமூக ஆர்வலர் இந்த பிரச்சனைக்கு காரணம் தூண்டி விட்டது. அன்றைய முதல்வர் மோடி என புகார் கொடுத்தார். குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மோடி மீது குற்றமில்லை எனக்கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு வழக்கு கொடுத்தவர், டிஜிபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு குஜராத் உயர் மன்றம் ஜாமின் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. ஆனால் உயர் நீதிமன்றம் உடனடியாக அந்த ஜாமினில் ரத்து செய்து உடனடியாக சரணனடைய வேண்டுமென தெரிவிக்கிறது. குஜராத் உயர்நீதிமன்றம் கட்டுப்பாட்டில் நடக்கிறது என தெரியவில்லை.
கர்நாடகா துணை முதல் மீண்டும் மீண்டும் வேகதாட்டு அணை கட்டுவோம் என்று கூறி வருகிறார். மேகதாட்டு அணை கட்டுவதாக இருந்தால் அந்தத் திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். தமிழ் மாநில விவசாய மாநாடு 28, 29 தேதிகளில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள் பங்கு பெற உள்ளனர். பிரச்சனைகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளது.
கர்நாடகா தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆட்டம் காண தொடங்கிவிட்டது. தற்போது, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த பொழுது பாஜக பிதட்ட ஆரம்பித்துள்ளனர். மகாராஷ்டிராவில் அமலாக்க துறை அதன் பணி செவ்வையாக செய்துள்ளது. அமலாக்கத்துறை கைப்பாவையாக மாறிவிட்டது. அவர்களுடைய திட்டங்களை எதிர்க்கட்சிகள் முறியடிக்கும். தமிழகத்தில் அமலாக்கத்துறை அனைத்து நடவடிக்கை எடுக்கும் என அண்ணாமலை அதிகாரி போல கூறி வருகிறார். அமலாக்க துறைக்கு வழிகாட்டுவது யார் என்று தெரியவில்லை. அண்ணாமலை வழிகாட்டுகிறாரா..?
பாஜகவை எதிர்த்து பேசினால் வழக்கு உண்டு. சிறையுண்டு உண்டு. இதுதான் ஜனநாயகம். பொது சிவில் சட்டம் மீண்டும் கொண்டு வந்து மக்கள் திசை திருப்பி பிரச்சனையை நாடு முழுவதும் கொண்டு செல்ல மேற்கொண்டு வருகிறார் மோடி, என தெரிவித்தார்.