பட்டியலின வகுப்பை சேர்ந்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் குவிப்பு : மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 July 2023, 6:41 pm

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூர் கிராமத்தில் இந்திராகாலனி பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞரான பிரபு(29) என்பவரை திண்டியூர் கண்மாய் பகுதியில் சங்கர் அஜய், சூரிய பிரகாஷ் உள்ளிட்ட 8பேர் கொண்ட கும்பலானது அரிவாளால் வெட்டி தப்பியோடியது.

ஏற்கனவே கடந்த ஜூன் 2 ஆம் தேதியன்று திருமோகூரில் கோவில் திருவிழாவில் இரு தரப்பு மோதல் ஏற்பட்ட தகராறில் 18பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பட்டியலின இளைஞர் மீது அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என கூறியும் தாக்குதலை கண்டித்து இந்திராகாலனி பொதுமக்கள் சாலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி