விடுதலை பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாத அளவுக்கு டோட்டலா மாறிட்டாங்களே!
Author: Shree4 July 2023, 10:07 am
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்திருப்பவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி ஆவார். மேலும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான “விடுதலை” திரைப்படத்தில் ஹீரோயின் வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக பார்க்கப்படும் இவர் முன்னதாக மாடலின் துறையில் இருந்து வந்தார். அதன் மூலம் சினிமா வாய்ப்புகள் தேடிவர பாவ கதைகள் , கா பே ரணசிங்கம் மற்றும் விடுதலை பாகம் 1 ஆகிய படங்களில் நடித்து அறிமுகத்தை பெற்றார்.
இவரை சுற்றியுள்ள சொந்தங்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு இவரது மார்க்கெட் உயர்ந்துவிட்டது. அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
தற்போது இவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது விதவிதமாக போட்டோ ஷூட் நடத்திய லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதில் பார்க்கவே கொஞ்சம் வித்யாசமே ஆளே டோட்டலாக மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ் குவித்து தள்ளியுள்ளனர்.