முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2023, 11:29 am

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் ‘முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில், ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலையில் உப்புமா, கிச்சடி உள்ளிட்ட பல்வேறு வகை சிற்றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ரூ. 404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 397

    0

    0