உயர்கல்வித்துறை செயல்பாட்டில் திருப்தி இல்ல… இனிமேல் எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும் ; ஆளுநர் போட்ட தடாலடி உத்தரவு..!!
Author: Babu Lakshmanan4 July 2023, 9:44 pm
சென்னை ; உயர்கல்வித்துறை செயல்பாட்டில் திருப்தி இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகங்களில் வேந்தருமான ஆர்என் ரவி தலைமையில் அனைத்து பல்கலைக்கழக பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்
பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் அமைப்புகளில் ஆளுநரின் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பல்கலைக்கழக சிண்டிகேட் , செனட் கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் தான் நடைபெறுகின்றன. பல்கலைக்கழகங்களில் வெளிப்படை தன்மையுடன் சிண்டிகேட், செனட் கூட்டங்கள் நடைபெறுவதில்லை. மேலும், பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருக்கிறது. நேர்மையான முறையில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும், எனக் கூறினார்.