ஒன்னும் தெரியாத பாப்பா 1 மணிக்கு போட்டாளாம் தாப்பா…. சீன் போட்ட சினேகாவை பங்கமா கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
5 July 2023, 12:26 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

திருமணத்திற்கு முன்னர் சினேகா ஒரு சில தொழிலதிபர்கள் மற்றும் நடிகர் ஸ்ரீ காந்த் போன்றவர்களை ரகசியமாக காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் சினேகா பேட்டி ஒன்றில் கிசு கிசு கேள்விகளுக்கு தான் ஒரு அடக்கமான பெண் தன்னிடம் இப்படி கேட்டகலாமா? என நழுவலான பதில் கொடுத்தார். நான் திரைப்படங்களில் கூட பக்கத்துக்கு வீட்டு பெண் போன்று தான் நடிப்பேன் என கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் உங்க ரகசிய காதல் விஷயமெல்லாம் எங்களுக்கு தெரியாதுன்னு நெனஞ்சி பேசுறீங்களா? என கேட்டதோடு ஒன்னும் தெரியாத பாப்பா 1 மணிக்கு போட்டாளாம் தாப்பா என்று கமெண்ட்ஸ் போட்டு கலாய்த்துத்தள்ளியுள்ளனர்.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 1159

    10

    17