வேங்கைவயல் விவகாரத்தில் திருப்பம்.. டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் : பரபரப்பு தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 4:02 pm

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் கண்டிப்பாக சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச்சட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இன்று 8 பேரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட பின், தொடர்ந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகமுள்ள 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி பெற்றதை அடுத்து, 3 பேரின் சோதனை மட்டும் நிறைவடைந்த நிலையில், 8 பேரும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இன்று 8 பேருக்கும் டிஎன்ஏ சோதனை செய்வதற்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!