10 வருஷம் பொண்டாட்டி, பிள்ளையை ஒளிச்சி வச்சிருந்தேன்? அதிர்ச்சி கொடுத்த ஆர்யா!

Author: Shree
5 July 2023, 6:05 pm

கோலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடியான ஆர்யாவும், சாயிஷாவும் முதல்முறையாக, ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

பாலிவுட் நடிகையான சயீஷா ஐந்தில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது. இதன்பின் காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர்.

சில வருடங்களாக தோல்வி படங்களில் நடித்து வாய்ப்பில்லாமல் இருந்து வந்த ஆர்யாவிற்கு சார்பட்டா பரமபரை திரைப்படம் கைகொடுத்து தூக்கியது. அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமளிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்யா தன்னை பற்றி வந்த வந்ததிகள் எது ரொம்ப சிரிக்க வைத்தது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நிறைய ரூமர்ஸ் வந்திருக்கிறது, ரொம்ப சிரித்ததுன்னா, 10 வருடத்திற்கு முன்னாடியே எனக்கு கல்யாணமாகிடுச்சின்னு சொன்னது தான்.

அதுவும் என் பொண்டாட்டி, 2 புள்ளைங்கள கேரளாவில் ஒளிச்சி வெச்சிருக்கான்னு சொன்னாங்க. அந்த ரூமர் நினைத்தால் இப்பவும் சிரிப்பு வரும். எப்படி இதெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்களோ? என்னை பொறுத்தவரை எந்த ரூமருக்கும் ரியாக்ஷன் கொடுக்கமாட்டேன். நம்ம சரியாக இருந்தால் அதைபற்றியெல்லாம் யோசிக்கக்கூடாது என்று ஆர்யா காமெடியாக கூறியுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!